உத்தர பிரதேசம்: மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை - கோராக்பூர் எய்ம்ஸ் அதிகாரி சஸ்பெண்ட்
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள நிர்வாக அதிகாரி ஒருவர், மாணவியை தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story