கோவிலில் இருந்து திரும்பும்போது ரோப்கார் நின்றதால் பா.ஜனதா எம்.எல்.ஏ. அந்தரத்தில் தவிப்பு 40 பக்தர்களும் பீதி


கோவிலில் இருந்து திரும்பும்போது ரோப்கார் நின்றதால் பா.ஜனதா எம்.எல்.ஏ. அந்தரத்தில் தவிப்பு  40 பக்தர்களும் பீதி
x

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரோப்கார் பெட்டிகள் நடுவழியில் நின்றன. இதனால், பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 40-க்கு மேற்பட்ட பக்தர்கள் அந்தரத்தில் தவித்தனர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் தேரி மாவட்டம் முசோரி அருகே சூர்காந்தா தேவி கோவில் உள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ. கிஷோர் உபாத்யாயா நேற்று அந்த கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் செய்து விட்டு, ரோப்காரில் கோவில் அடிவாரத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ரோப்கார் பெட்டிகள் நடுவழியில் நின்றன. இதனால், பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 40-க்கு மேற்பட்ட பக்தர்கள் அந்தரத்தில் தவித்தனர். அவர்கள் பீதி அடைந்தனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் பெட்டிகளில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். அதன்பிறகுதான் அவர்கள் நிம்மதி அடைந்தனர். கடந்த மே மாதம்தான் அக்கோவிலில் ரோப்கார் சேவை தொடங்கியது.


Next Story