உத்தரகாண்ட்: பாலியல் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிரிக்கெட் பயிற்சியாளர் தற்கொலை முயற்சி


உத்தரகாண்ட்: பாலியல் புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிரிக்கெட் பயிற்சியாளர் தற்கொலை முயற்சி
x

கிரிக்கெட் சங்கத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நரேந்திர ஷா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர் நரேந்திர ஷா. இவர் சொந்தமாக கிரிக்கெட் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தன்னிடம் பயிற்சி பெற்று வந்த 3 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு நரேந்திர ஷா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, அவர் கிரிக்கெட் சங்கத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து நரேந்திர ஷா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு டேராடூனில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து, அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டதும் பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்காக அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story