விரைவில் சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை?
விரைவில் சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க இருப்பதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்னர்.
சென்னை,
சென்னையில் இருந்து மைசூரு, கோவைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜூலை மாதம் மூன்று வந்தே பாரத் ரெயில்களை இயக்கப்படவுள்ளன. அதாவது, கோரக்பூரில் இருந்து லக்னோ, சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் ஜோத்பூரில் இருந்து சபர்மதி வரை ஆகிய மூன்று வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதில், சென்னை-திருப்பதி இடையே, 'வந்தே பாரத்' ரெயில் சேவை விரைவில் துவங்குவதற்கான பணிகள் நடப்பதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்னர். ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் தற்போது வரை கிடைக்கவில்லை.
எனினும், விரைவில் ஒப்புதல் கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்த பின் சென்னை- திருப்பதி வந்தே பாரத் ரெயிலுக்கான கால அட்டவணை, பயண நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும் என ரெயில்வே தரப்பில் கூறப்படுகிறது.