இந்தியாவில் மின்னணு சிப்களை தயாரிக்க வேதாந்தா பாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்!


இந்தியாவில் மின்னணு சிப்களை தயாரிக்க வேதாந்தா பாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்!
x

செமிகண்டக்டர் ஆலையை அமைக்க வேதாந்தா பாக்ஸ்கான் குழுமம் குஜராத்தை தேர்வு செய்துள்ளது.

புதுடெல்லி,

செமிகண்டக்டர் மற்றும் தொடுதிரை உற்பத்திக்கு வேதாந்தா - பாக்ஸ்கான் குழுமத்துடன் ரூ.1.54 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் அரசு கையெழுத்திட்டது.

இது குறித்து வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் கூறுகையில், இந்தியாவில் ஒரு வலுவான உற்பத்தித் தளத்தை உருவாக்க, வேதாந்தா - பாக்ஸ்கான் குஜராத்தைத் தங்கள் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலைக்கான இலக்காகத் தேர்ந்தெடுத்துள்ளது.

மின்னணு சிப்களை வாங்குபவராக இருந்த இந்தியா, இனி சிப்களை தயாரிப்பவராக மாறுவதற்கான பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் டிஜிட்டல் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்யும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்தார்.

இந்த திட்டம், இந்தியாவின் மின்னணு இறக்குமதியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1 லட்சம் நேரடி திறன்மிக்க வேலைகளை வழங்கும் இந்தத் திட்டம், நாட்டின் உற்பத்தித் துறைக்கு உதவும்.

இந்த முதலீடு, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், துணைத் தொழில்கள் உருவாக உதவும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி இந்தத் திட்டத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.


Next Story