டெல்லி விமான நிலையத்தில் தீ விபத்து
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து தொடர்பாக உள் விசாரணைக்கு சம்பந்தப்பட்ட துறைகள் உத்தரவிட்டுள்ளன.
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தின் சரக்கு முனைய பகுதியில் விமானங்களை இழுத்துச்செல்லும் இழுவை வாகனம் தீ பிடித்து விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 5.25 மணிக்கு இந்த தீ விபத்து நடைபெற்றுள்ளது. உடனடியாக தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து தொடர்பாக உள் விசாரணைக்கு சம்பந்தப்பட்ட துறைகள் உத்தரவிட்டுள்ளன.
Related Tags :
Next Story