மெட்ரோவில் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்து 1,669 பேர் பயணம்


மெட்ரோவில் வாட்ஸ்-அப் மூலம்   டிக்கெட் எடுத்து 1,669 பேர் பயணம்
x

மெட்ரோவில் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்து 1,669 பேர் பயணம் செய்துள்ளனர்.

பெங்களூரு: பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தையொட்டி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் வினியோகம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று முன்தினம் மெட்ரோ ரெயிலில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் எடுத்திருந்தது.

அதன்படி, ராஜ்யோத்சவா தினத்தில் மெட்ரோ ரெயில்களில் 1,669 பயணிகள் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்திருந்தார்கள். அத்துடன் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து மெட்ரோ ரெயிலில் பயணிக்க 14 ஆயிரத்து 400 பேர் புதிதாக இணைந்திருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story