ஜனாதிபதி வேட்பாளராகிறார் வெங்கையா நாயுடு? பாஜக மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து சந்திப்பு


ஜனாதிபதி வேட்பாளராகிறார் வெங்கையா நாயுடு?  பாஜக மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து சந்திப்பு
x

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஜனாபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு நிறுத்தபடக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரபலமான வேட்பாளரை களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

மேலும் இந்த வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்வதற்கான பணிகளையும் தொடங்கி விட்டது. இதற்காக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளுடனும் பா.ஜனதா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஜனாபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு நிறுத்தபடக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. ஜேபி நட்டாவும், அமித்ஷாவும் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கும் சந்தித்து பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.


Next Story