மராட்டிய இடைத்தேர்தல் வெற்றி: மக்கள் எங்களை ஆதரிப்பதை காட்டுகிறது - உத்தவ் தாக்கரே


மராட்டிய இடைத்தேர்தல் வெற்றி: மக்கள் எங்களை ஆதரிப்பதை காட்டுகிறது - உத்தவ் தாக்கரே
x

மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றுள்ளார்.

மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 3-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே போட்டியிட்டார்.

இந்த நிலையில், இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. இதில் அந்தேரி கிழக்கு தொகுதியில், உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதன்பின், உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, இந்த வெற்றி போராட்டத்தின் ஆரம்பமாகும். இனி வரும் அனைத்து போராட்டங்களிலும் ஒற்றுமையாக போராட வேண்டும் என சிவ சைனியர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த தேர்தலுக்காக எங்கள் கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டன, ஆனால் இதை விரும்பியவர்கள் தேர்தல் வளையத்திற்கு அருகில் இல்லை. இடைத்தேர்தல் முடிவுகள் மக்கள் எங்களுக்கு (உத்தவ் தரப்பு) ஆதரவளிப்பதை காட்டுகின்றன.

இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு விழுந்த 12 ஆயிரம் வாக்குகள் குறித்து உத்தவ் தாக்கரே கூறிகையில், எங்கள் எதிரிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இந்த வாக்குகளை அவர்கள் பெற்றிருப்பார்கள். என அவர் தெரிவித்தார்.


Next Story