ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் முதல் முறையாக தரையிறங்கிய நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர்..!


ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் முதல் முறையாக தரையிறங்கிய நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர்..!
x

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர் முதல் முறையாக தரையிறங்கியது.

புதுடெல்லி,

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல், முதன்முதலாக முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்டுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும். ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

சமீபத்தில் இந்தப் போர்க்கப்பல் அரபிக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது அந்தக் கப்பலில் முதல்முறையாக 'மிக்-29 கே' போர் விமானம், இரவு நேரத்தில் தரை இறங்கும் சோதனை வெற்றிகரமாக நடந்தேறியது.

இந்த நிலையில் தற்போது இந்திய கடற்படையின் எம்எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர் வெற்றிகரமாக முதல் முறையாக விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்தில் தரையிறங்கியுள்ளது.

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் எம்எச்-60ஆர் ஹெலிகாப்டர் தரையிறங்கிய வீடியோவை இந்திய கடற்படை பகிர்ந்துள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்எச்-60 ரோமியோ உலகின் மிகவும் மேம்பட்ட நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஹெலிகாப்டர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.



Next Story