டாக்டர் செய்த கீழ்தரமான செயல்: நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடுமை...! வீடியோ


டாக்டர் செய்த கீழ்தரமான செயல்: நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடுமை...! வீடியோ
x

ராஜஸ்தானில் டாக்டர் ஒருவர் தனது காரில் தெரு நாயை கட்டி இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் டாக்டர் ஒருவர் தனது காரில் நாயை கட்டி சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த நாய், காரின் பின்னாலேயே ஓடியுள்ளது. இதனை பைக்கில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அந்த காரை வழிமறித்து, நிறுத்தி நாயை அவிழ்த்து விட்டுள்ளனர். இதன்பின்பு காயத்துடன் இருந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர்.

ரஜ்னீஷ் கால்வா என்பவர் போலீசை உடனடியாக தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறினார். இதையடுத்து டாக் ஹோம் அறக்கட்டளை கொடுத்த புகாரின் பேரில் நாயை காரில் கட்டி இழுத்துச்சென்ற டாக்டர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தனது வீட்டின் அருகே தெரு நாய் வசித்து வந்ததாகவும், அதனை அப்புறப்படுத்த முயற்சியில் தான் அவ்வாறு ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

பல வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நீண்ட கயிறு இருப்பதால், நாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வாகனத்தின் இறுபுறமும் அங்கும் இங்கும் ஓடியது காண்போரை கண் கலங்க செய்தது.


Next Story