வருணா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட மாட்டார்


வருணா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட மாட்டார்
x

வருணா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட மாட்டார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை களம் இறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. அங்கு எடியூரப்பா மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து ஆலோசித்து வருவதாக நேற்று முன்தினம் எடியூரப்பா கூறியிருந்தார்.

இந்த நிலையில், தனது மகன் விஜயேந்திரா எக்காரணம் கொண்டும் வருணா தொகுதியில் போட்டியிட மாட்டார் என்று எடியூரப்பா நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் எனது மகன் விஜயேந்திரா சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுவார். எனது தொகுதியிலேயே போட்டியிடுமாறு அவருக்கு அறிவுறுத்தி உள்ளேன். அவர் வருணா தொகுதியில் போட்டியிடுமாறு அழுத்தம் வருகிறது. ஆனால் அவர் வருணா தொகுதியில் போட்டியிடும் பேச்சுக்கே இடமில்லை. பா.ஜனதா வேட்பாளர்பட்டியில் இன்னும் 4, 5 நாட்களில் வெளியாக உள்ளது. அப்போது எல்லா விஷயங்களும் தெரிந்துவிடும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story