ரஷீத் கான் பெயரில் ஷ்ரத்தா கொலையை ஆதரித்து வீடியோ வெளியிட்ட விகாஷ் குமார்!


ரஷீத் கான் பெயரில் ஷ்ரத்தா கொலையை ஆதரித்து வீடியோ வெளியிட்ட விகாஷ் குமார்!
x

இந்தநிலையில் மிககொடூரமான கொலை நிகழ்த்திய அவர் ‘கூகுள் தேடல் வரலாறால்' (கூகுள் சர்ச் ஹிஸ்டரி) போலீசில் சிக்கிய சம்பவம் தெரியவந்து உள்ளது

புதுடெல்லி

ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை 35 துண்டுக்காக வெட்டி ஆப்தாப் கொலை செய்ததற்கு ரஷீத் கான் என்ற பெயரில் ஆதரவு தெரிவித்து பேசியவரை கைது செய்த உத்தரப்பிரதேச காவல்துறை அவரது உண்மை பெயர் விகாஷ் குமார் என தெரிவித்து உள்ளார்கள்.

மும்பையை அடுத்த வசாயை சேர்ந்த இளம்பெண் ஷரத்தாவை அவரது காதலன் அப்தாப் அமீன் படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அப்தாப் அமீன், ஷரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி வீசியவர் ஆவார்.

இந்தநிலையில் மிககொடூரமான கொலை நிகழ்த்திய அவர் 'கூகுள் தேடல் வரலாறால்' (கூகுள் சர்ச் ஹிஸ்டரி) போலீசில் சிக்கிய சம்பவம் தெரியவந்து உள்ளது

அப்தாப் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஷ்ரத்தா மராட்டிய மாநிலம் துலிஞ்ச் காவல்நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார். அதில், "இன்று அவன் என்னை கொலை செய்ய முயற்சி செய்தான். கொலை செய்துவிடுவேன் என மிரட்டினான்.

பல துண்டுகளாக வெட்டி வீசிவிடுவேன் என்று கூறினான். கடந்த 6 மாதம் முன்பாகவும் அவன் இதேபோல் என்னை தாக்கினான். ஆனால், அப்போது எனக்கு காவல் நிலையம் வந்து புகார் கொடுப்பதற்கான தைரியமே இல்லை. அவன் என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததால் நான் அஞ்சினேன்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாவில், ரஷீத் கான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் ஷ்ரத்தா வாக்கர் கொலையை நியாயப்படுத்தும் வகையில் அதை ஆதரித்து பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் புலந்த்ஷா போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை பெயர் ரஷீத் கான் இல்லை என்றும், விகாஷ் குமார் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விகாஷ் குமார் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story