வீட்டின் முன் உள்ள குப்பைகளை பெருக்குவதில் சண்டை; சாக்கடையை அள்ளி வீசிக் கொண்ட பெண்கள் - வைரலாகும் வீடியோ


வீட்டின் முன் உள்ள குப்பைகளை பெருக்குவதில் சண்டை; சாக்கடையை அள்ளி வீசிக் கொண்ட பெண்கள் - வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 17 July 2022 12:11 AM IST (Updated: 17 July 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

இருவரும் ஆவேசமாக தங்கள் துடைப்பங்களால் குப்பைகளை ஒவ்வொன்றாக வீச தொடங்கினர்.

மும்பை,

ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இரு பெண்கள், தங்கள் வீடுகளுக்கு முன்னால் வீட்டு வாசலை துடைப்பம் கொண்டு குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒரு பெண் தனது அண்டை வீட்டுப் பெண்ணின் வீட்டை நோக்கி குப்பைகளை கொண்டு சேர்த்தார். உடனே அவரும் அதையே செய்யத் தொடங்கினார். இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

இருவரும் ஆவேசமாக தங்கள் துடைப்பங்களால் குப்பைகளை ஒவ்வொன்றாக வீச தொடங்கினர். ஒரு வயதான பெண் அவர்களின் சண்டையில் குறுக்கிட்டு அவர்களை தள்ளிவிட்டு சமாதானப்படுத்துகிறார்.

இருப்பினும், அந்த பெண்கள் இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டனர். பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் சாக்கடை அசுத்தத்தையும், தண்ணீரையும் தெளித்து சண்டையை தீவிரமாக்கினர்.

இந்த இரண்டு பேரையும் யாராலும் தடுக்க முடியாது என்று தெரிந்துகொண்ட மற்றவர்கள், அவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்தனர். சிலர் படம்பிடித்தனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

1 More update

Next Story