கடற்படை தளபதியின் அமெரிக்க பயணம்: இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு - மத்திய அரசு தகவல்


கடற்படை தளபதியின் அமெரிக்க பயணம்: இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு - மத்திய அரசு தகவல்
x

கோப்புப்படம்

கடற்படை தளபதியின் அமெரிக்க பயணம், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார் 4 நாள் பயணமாக கடந்த 19-ந் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அவர் 25-வது சர்வதேச கடல் சக்தி கருத்தரங்கில் பங்கேற்றார். இந்த பயணத்தின்போது அவர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் கடற்படை தளபதிகளை தனித்தனியே சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் விவேக் மத்வாலிடம் கடற்படை தளபதியின் அமெரிக்க பயணம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், "கடற்படை தளபதியின் அமெரிக்க பயணம், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், இந்தோ-பசிபிக் முழுவதும் உள்ள பல்வேறு நட்பு நாடுகளுடனான தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்கியது. இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட விரிவான ஈடுபாடுகள், சுதந்திரமான, திறந்த மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது" என கூறினார்.


Next Story