நாடு முழுவதும், நாளை 197 மாவட்டங்களில் தொழில்பழகுனர் பயிற்சி முகாம்


நாடு முழுவதும், நாளை 197 மாவட்டங்களில் தொழில்பழகுனர் பயிற்சி முகாம்
x

கோப்புப்படம் 

நாடு முழுவதும், நாளை 197 மாவட்டங்களில் தொழில்பழகுனர் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக, திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் சார்பில் தேசிய தொழில் பழகுனர் முகாம் நாளை (திங்கட்கிழமை) 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 197 இடங்களில் நடக்கிறது. முகாம்களில் பங்கேற்க பல உள்ளூர் நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியை வழங்கி, அவர்கள் தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைக்கும் வாய்ப்பை வழங்கும்.

முகாம்களில் பங்கேற்க விரும்புவோர் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில், அருகில் முகாம் நடைபெறும் இடத்தையும் கண்டறியலாம். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் திறன்பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் அல்லது ஐ.டி.ஐ. டிப்ளமோ முடித்தவர்கள் அல்லது பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த முகாம்களின் மூலம், விண்ணப்பதாரர்கள் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழைப் பெறுவார்கள் என்றும், பயிற்சிக்குப் பிறகு அவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்படும் என்றும் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story