4 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது


4 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
x

4 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

மராட்டியம், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணி வரை நடைபெற உள்ள தேர்தலில் எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மராட்டியத்தில் 6, கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4, ஹரியானாவில் 2 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

4 மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடத்துக்கு 22 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிராவில் 6 இடங்களில் பாஜகவுக்கு 2, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரசிற்கு தலா ஒரு இடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எஞ்சிய ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுவதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இதேபோல், கர்நாடகாவில் 4 இடத்துக்கு பாஜகவில் 3, காங்கிரஸில் 2, மஜதவில் ஒருவர் என 6 பேர் போட்டியிடுகின்றனர். ராஜஸ்தானில் 4 இடத்துக்கு காங்கிரஸில் 3 பேர், பாஜகவில் ஒருவர், பாஜக ஆதரவுடன் சுயேச்சை என 5 பேர் போட்டியிடுகின்றனர்.

அரியானாவில் 2 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸில் தலா ஒருவர், பாஜக ஆதரவுடன் சுயேச்சை என 3 பேர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story