ஓடும் பஸ்சில் இளம் பெண்ணிடம் வாலிபர் சில்மிஷம்; போக்சோவில் கைது


ஓடும் பஸ்சில் இளம் பெண்ணிடம் வாலிபர் சில்மிஷம்;  போக்சோவில் கைது
x

மங்களூருவில் ஓடும் பஸ்சில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்.

மங்களூரு;


பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த 7-ந் தேதி மங்களூருவில் நடந்த தனியார் விமான ஊழியர்களுக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக பஸ்சில் சென்றார். அப்போது அவரது இருக்கைக்கு பின்னால் இருந்த வாலிபர் ஒருவர் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இளம்பெண் அவரை அழைத்து கண்டித்துள்ளார்.

ஆனால் அந்த வாலிபர் அதை கண்டுகொள்ளவில்லை. மீண்டும், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் இதுகுறித்து பஸ் டிரைவர் மற்றும் சக பயணிகளிடம் கூறினார்.

இதையடுத்து பயணிகள் மற்றும் டிரைவர் பஸ்சை நிறுத்தி அவரிடம் அதுகுறித்து கேட்டனர். அப்போது அவர் அனைவரையும் மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவர் மற்றும் சக பயணிகள் அவரை மடக்கி பிடித்து கங்கநாடி போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை போக்சோவில் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பி.சி. ரோட்டை சேர்ந்த முகமது முஸ்தப்பா என்பது தெரியவந்தது.


Next Story