அண்டை நாடுகளுடன் நல்லுறவு வேண்டும் ஆனால்...! பாகிஸ்தான், சீனாவுக்கு ஜெய்சங்கர் சூசக செய்தி
பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது என ஜெய்சங்கர் கூறினார்.
புதுடெல்லி
வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், சைப்ரஸில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியபோது கூறியதாவது:-
இந்தியாவைப் போல எந்த நாடும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதில்லை என்பதால், அடிப்படைப் பிரச்சினைகளில் எந்த சமரசமும் இல்லை.பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் ஏற்கமாட்டோம் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம்.
பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. இந்தியா அனைவருடனும் சுமூகமான உறவை பேணுவதற்கே விரும்புகிறது. ஆனால் அது பயங்கரவாதத்தை மன்னிக்கவோ அல்லது புறக்கணித்தோம் என்பது அர்த்தமல்ல.
எங்கள் எல்லைகளில் எங்களுக்கு சவால்கள் உள்ளன, அவை கொரோனா காலத்தில் தீவிரமடைந்துள்ளன. சீனாவுடனான உறவுகள் இயல்பானவை அல்ல, ஏனெனில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்த முயற்சிக்கும் நாங்கள் உடன்பட மாட்டோம் என கூறினார்.