12 நாட்களாக வட்டமாக நடைபோட்ட செம்மறி ஆடுகள்...!விலகாத மர்மம், வைரல் வீடியோ.!


12 நாட்களாக வட்டமாக நடைபோட்ட செம்மறி ஆடுகள்...!விலகாத மர்மம், வைரல் வீடியோ.!
x
தினத்தந்தி 21 Nov 2022 3:16 PM IST (Updated: 21 Nov 2022 3:29 PM IST)
t-max-icont-min-icon

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், ஒவ்வொரு பயனாளரும் வெவ்வேறு விதமான கண்ணோட்டங்களில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

புதுடெல்லி

சீனாவில் மியோ என்பவர் 34 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.இதில் திடீரென்று 13 ஆடுகள் ஒரு வட்டமாக சுற்றி, சுற்றி நடக்க தொடங்கின. ஏன் இப்படி வட்டம் போடுகிறது? என்ன செய்ய முயற்சிக்கிறது என எதுவும் புரியவில்லை.

ஆனால் 12 நாட்களாக இது தொடர்ந்து நடந்துள்ளது. ஆனால், கச்சிதமாக ஒரே வட்டத்தில் தொடர்ந்து அந்த ஆடுகள் உலா வந்திருக்கின்றன. கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. ஒருவேளை ஆடுகளுக்கு ஏதேனும் நோய் இருந்து, அதன் காரணமாக வட்ட நடை போட்டிருக்கலாம் என்று சொன்னால், அதன் உரிமையாளர் இந்த தகவலை திட்டவட்டமாக மறுக்கிறார்.

அனைத்து ஆடுகளுமே ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றன என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், ஒவ்வொரு பயனாளரும் வெவ்வேறு விதமான கண்ணோட்டங்களில் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

சிலர் இதை கேலி, கிண்டல் செய்து நகைச்சுவையாக பதிவிடுகின்றனர். சிலர், இதன் பின்னணியில் ஏதேனும் , மர்மமான காரணம் இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், உண்மையில் இந்த விசித்திர நடவடிக்கைக்கு பின்னால் உள்ள மர்மம் என்னவென்பது யாருக்கும் தெரியவில்லை.



Next Story