இருக்கைக்காக ஓடும் ரெயிலில் தலைமுடியை பிடித்து சண்டை பெண் போலீஸ் உள்பட 3 பெண்கள் காயம்


இருக்கைக்காக ஓடும் ரெயிலில் தலைமுடியை பிடித்து சண்டை பெண் போலீஸ் உள்பட 3 பெண்கள் காயம்
x

மும்பையில் மின்சார ரெயிலில் பயணம் செய்த பெண்களுக்கு இடையே நடந்த சண்டை தொடர்ந்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை

மும்பையில் மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் இருக்கைக்காக பெண் பயணிகளிடையே கடுமையான சண்டை நடந்தது. இது மொபைல் போன் கேமராவில் படம்பிடிக்கப்பட்டது. அதில் தானே-பன்வெல் மின்சார ரெயிலின் பெண்கள் பெட்டிக்குள் பெண்கள் ஒருவரையொருவர் மோதிக்கொள்வதைக் காணலாம்.

போலீசார் அளித்த தகவலின் படி நவி மும்பையில் உள்ள டர்பே ரெயில் நிலையத்தில் உள்ளூர் ரெயிலுக்குள் இருக்கைக்காக மூன்று பெண் பயணிகளுக்கு இடையே சண்டை நடந்தது. சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

தானேயிலிருந்து ரெயிலில் ஏறிய ஒரு பெண்ணும் அவரது பேத்தியும், கோபர்கைரானில் ரெயிலில் ஏறிய மற்றொரு பெண்ணும் இருக்கைக்காக காத்திருந்தனர். டர்பே ரயில் நிலையத்தில் இருக்கை காலியாக இருந்தபோது, பாட்டி தனது பேத்தியை இருக்கையில் அமர வைக்க முயன்றார். அதே நேரத்தில், மற்ற பெண்ணும் இருக்கையை ஆக்கிரமிக்க முயன்றார். இதனால் பெண் பயணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினர். மேலும்சில பயணிகளும் சண்டையில் ஈடுபட்டனர், இதன் விளைவாக பெண்கள் பெட்டிக்குள் அசிங்கமான கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சண்டையின் போது பெண் போலீஸ் உட்பட குறைந்தது மூன்று பெண்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. தகராறைத் தீர்க்க முற்பட்ட பெண் போலீசையும் சில பெண் பயணிகள் தாக்கியதில் அவர்காயமடைந்தார். அந்த வீடியோவில், இரண்டு பெண் பயணிகளின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுவதைக் காணலாம்.

பெண் போலீசை தாக்கியதற்காக 27 வயது பெண் பயணி ஒருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.



Next Story