தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கவுள்ளோம்.. நிதிஷ் குமார் பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தற்போதில் இருந்தே தொடங்கவுள்ளதாக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
மும்பை,
எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது;
இன்று இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே இரண்டு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் தீர்மானங்கள் என்ன எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி சொல்லப்பட்டுவிட்டது. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் நாங்கள் எங்களது பணிகளை தொடர்வோம்.
யார் உலகின் மைய சக்தியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறாரோ, அவர் தோற்கடிக்கப்படுவார். நாங்கள் சோர்வடைந்து அமரப்போவதில்லை. இப்போதில் இருந்தே தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களுடைய பணிகளை பற்றியும் ஊடக நண்பர்கள் எழுதுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story