"மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தை உணர்வுப்பூர்வமாக கையாளுகிறோம்" - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்


மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தை உணர்வுப்பூர்வமாக கையாளுகிறோம் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
x

மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தை உணர்வுப்பூர்வமாக கையாளுகிறோம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரம் குறித்து மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் கூறியதாவது:-

"மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தை உணர்வுப்பூர்வமாக கையாளுகிறோம். வீரர்கள் என்ன கோரிக்கை வைத்தாலும், நாங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் அனைவருக்கும் சமம், எல்லா வீரர்களும் எங்களுக்கு முக்கியம் என்று இந்த விவகாரத்தை அரசியலாக்குபவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன்." என்று மத்திய மந்திரி கூறினார்.


Next Story