ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்ல முயற்சி - பிரதமர் மோடி


ஏழைகளின் வீட்டு வாசலுக்கு வங்கிகளை கொண்டு செல்ல முயற்சி - பிரதமர் மோடி
x

இந்தியாவில் நகரம் முதல் கிராமம் வரை, ஷோரும் முதல் காய்கறி வண்டி வரை யுபிஐ பரிமாற்றத்தை பார்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் 75 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 75 டிஜிட்டல் வங்கி அலகுகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

அனைவரையும் உள்ளடக்கிய நிதி நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

வங்கித்துறையில் அரசு இரு வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. ஒன்று வங்கிகளின் நிலையை வலுப்படுத்தி அதில் ஒளிவுமறைவற்ற தன்மையை உருவாக்குவது. மற்றொன்று நாட்டின் குடிமக்கள் அனைவருக்கு வங்கிசேவைகளை கொண்டு சேர்ப்பது. அதன் முக்கிய நகர்வாகவே இந்த 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன.

ஏழைகளின் வீட்டு வாசலுக்க் வங்கிகளை கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. இந்தியாவில் நகரம் முதல் கிராமம் வரை, ஷோரும் முதல் காய்கறி வண்டி வரை யுபிஐ பரிமாற்றத்தை பார்கலாம். சாதாரண மனிதர்களின் வாழக்கை தரத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இரவு பகலாக அரசு உழைக்கிறது என்றார்.


Related Tags :
Next Story