கெம்பேகவுடா சிலை திறப்பு விழா: முன்னாள் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுத்தோம் - மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி


கெம்பேகவுடா சிலை திறப்பு விழா: முன்னாள் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுத்தோம் - மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:45 PM GMT)

கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவுக்கு முன்னாள் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுத்தோம் என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது கெம்பேகவுடா தொடர்பான நிகழ்ச்சி. நமக்கு கெம்பேகவுடா மட்டுமே முக்கியமாக இருக்க வேண்டும். இந்த விழாவுக்கு அதிகமாக அழைப்பிதழ் அச்சிடவில்லை. பிரதமர் தேவேகவுடா உள்பட அனைத்து முன்னாள் மந்திரிகளுக்கும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையே தொலைபேசியில் பேசி அழைப்பு விடுத்தார். அதாவது முன்னாள் முதல்-மந்திரிகள் எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, குமாரசாமி ஆகியோரையும் பசவராஜ் பொம்மை அழைத்தார். தேவேகவுடா மீது எங்களுக்கு அபாரமான மரியாதை உள்ளது. சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் புனித மண் சேகரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேவேகவுடாவை நேரில் சந்தத்து அழைப்பு விடுத்தேன். தற்போது பிரதமர் மோடி வருகை தந்ததால் முதல்-மந்திரியே அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.


Next Story