அமெரிக்கா-இந்திய கூட்டாண்மை ஆற்றல் மிக்கது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்கா-இந்திய கூட்டாண்மை ஆற்றல் மிக்கது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்கா-இந்திய கூட்டாண்மை வரலாற்றில் எந்த காலத்திலும் இல்லாததை விட வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல் மிக்கது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "பிரதம மந்திரி, உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அமெரிக்கா-இந்திய கூட்டாண்மை வரலாற்றில் எந்த காலத்திலும் இல்லாததை விட இன்று வலுவானது, நெருக்கமானது மற்றும் ஆற்றல் மிக்கது என்பதை ஜி 20 முழுவதும் நாங்கள் உறுதிப்படுத்துவோம்" என்று அதில் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story