அரியானா: நகரங்களில் உள்ள அனைத்து ரெயில்வே கிராசிங்குகளிலும் சாலை மேம்பாலம்; முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார்


அரியானா: நகரங்களில் உள்ள அனைத்து ரெயில்வே கிராசிங்குகளிலும் சாலை மேம்பாலம்; முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார்
x

ஆளில்லா லெவல் கிராசிங்குகளா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு ரெயில்வே கிராசிங்குகளிலும் சாலை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்படும்.

சண்டிகர்,

அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் பிரகதியில் நடைபெற்ற பேரணியில், சிர்சா மாவட்டத்திற்கு ரூ.575 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, மாநிலம் முழுவதும் சமமான வளர்ச்சி உறுதி செய்யப்பட்டு வருகிறது. மாநில மக்களை எங்கள் குடும்பமாக கருதி நாங்கள் உழைத்துள்ளோம்.

மாநிலத்தின் நகரங்களில் செயல்பட்டு வரும் ஒவ்வொரு ரெயில்வே கிராசிங்குகளிலும், அவை ஆளில்லா லெவல் கிராசிங்குகளா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு ரயில்வே கிராசிங்குகளிலும் சாலை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்படும்.

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்களை காப்பாற்றி, அவர்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிப்பதன் மூலம், சிர்சா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ரூ. 5 முதல் 10 லட்சம் வரை செலவில் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.

சிர்சா மாவட்டத்திலுள்ள ஓட்டு ஏரியில், ஒரு மாதத்திற்கு இந்த ஏரியில் உள்ள மண்ணை விவசாயத்திற்காக எடுக்க அனுமதி அளிக்கப்படும். அதன்படி, விவசாயிகள் 6 அல்லது 10 டன் மண்ணை தள்ளுவண்டிகளில் ஏற்றி உபயோகிக்கலாம்.

தள்ளுவண்டிகளில் மண் அள்ளுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும். இதற்கு விவசாயி ஒரு டன்னுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு மாதத்திற்கு, எந்த அனுமதியும் உரிமமும் தேவையில்லை.

மாநிலத்தின் அனைத்து வளர்ச்சி பணிகளும் முடிக்கப்பட்டு, எந்த கோரிக்கை வந்தாலும் நிறைவேற்றப்படும். பணத்துக்கு பஞ்சமில்லை" என்று பேசினார்.


Next Story