சட்டசபை தேர்தலை கூட்டு தலைமையின் கீழ் சந்திப்போம்- டி.கே.சிவக்குமார் பேட்டி


சட்டசபை தேர்தலை கூட்டு தலைமையின் கீழ் சந்திப்போம்-  டி.கே.சிவக்குமார் பேட்டி
x

சட்டசபை தேர்தலை கூட்டு தலைமையின் கீழ் சந்திப்போம் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு (2023) நடக்க உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலை எங்கள் கட்சி கூட்டு தலைமையின் கீழ் சந்திக்கும். கட்சி தலைவர்களுக்குள் இருக்கும் சொந்த பிரச்சினைகளால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழக்காமல் இருப்பது குறித்து சமீபத்தில் ராகுல்காந்தியிடம் விவாதித்தேன். கூட்டு தலைமையின் கீழ் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். நான் கட்சியின் உண்மையான விசுவாசி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story