இடைநீக்கம் செய்து அச்சுறுத்தினாலும் 'மக்கள் பிரச்சினைகள் தீரும் வரை ஓய மாட்டோம்' திருச்சி சிவா பேட்டி


இடைநீக்கம் செய்து அச்சுறுத்தினாலும் மக்கள் பிரச்சினைகள் தீரும் வரை ஓய மாட்டோம் திருச்சி சிவா பேட்டி
x

நாடாளுமன்றத்தில் தேவையில்லாத விஷயங்களை விவாதிக்க வேண்டுமென நாங்கள் கோரவில்லை. பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்தே விவாதிக்க கூறினோம்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் தேவையில்லாத விஷயங்களை விவாதிக்க வேண்டுமென நாங்கள் கோரவில்லை. பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்தே விவாதிக்க கூறினோம். ஆனால் மத்திய அரசு அதை செய்யவில்லை. விலைவாசி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்கவில்லை. அதுபற்றி விவாதிக்கும்போதுதான் முடிவுகள் கிடைக்கும். ஆனால் மத்திய அரசு விவாதத்துக்கே தயாராக இல்லை. நாடாளுமன்றம் என்பது சட்டங்களை கொண்டுவருவதற்கு மட்டும் இல்லை, மக்கள் பிரச்சினைகளை பேசி நிறைவேற்றக்கூடிய இடமாகவும் இருக்கிறது.நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறோம் என பொய் பிரசாரத்தை அரசு நடத்துகிறது. மக்கள் பிரச்சினையை தீர்க்க போராடும் எங்கள் மீது இடைநீக்கம் உள்ளிட்ட எந்த நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். மக்கள் பிரச்சினையை தீர்க்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story