களைகட்டிய ஓணம் பண்டிகை... கேரளாவில் ஒரே வாரத்தில் கோடியில் மது விற்பனை..!


களைகட்டிய ஓணம் பண்டிகை... கேரளாவில் ஒரே வாரத்தில் கோடியில் மது விற்பனை..!
x

கோப்புப்படம் 

கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

திருவணந்தபுரம்,

ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. கேரளாவில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 624 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கேரளாவின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கொல்லம் ஆசிரம விற்பனை கடையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story