மேற்கு வங்காளம்: துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது 7 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு


மேற்கு வங்காளம்: துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது 7 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு
x
தினத்தந்தி 6 Oct 2022 2:23 AM IST (Updated: 6 Oct 2022 3:16 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு பொது இடங்களில் துர்கா தேவிக்கு சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, சிலை கரைப்பு தினமான நேற்று துர்கா சிலைகள் நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரியில் உள்ள மால் ஆற்றில் துர்கா சிலை கரைப்பின்போது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கினர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான பலரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். துர்கா சிலைகளைக் கரைகளைச் சென்று 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story