சரக்கு ரெயில் விபத்துக்கு காரணம் என்ன? ரெயில்வே வெளியிட்ட திடுக்கிடும் தகவல்


சரக்கு ரெயில் விபத்துக்கு காரணம் என்ன?  ரெயில்வே வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2023 5:02 AM GMT (Updated: 25 Jun 2023 6:17 AM GMT)

மேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில் சிவப்பு சிக்னலில் ரெயில் நிற்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

காரக்பூர் -பாங்குரா ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரெயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இவற்றை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனினும் முழு ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி சேதங்களை சரி செய்ய 8 மணி நேரம் தேவைப்படும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பாங்குரா வழித்தடத்தில் இயக்கப்படும் 14 ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தென்கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மேலும், 3 ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதாகவும், 2 ரெயில்கள் பாதி தூரத்துக்கு இயக்கப்படுவதாகவும் தென்கிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்நிலையில், சிவப்பு சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் சென்றதே ரெயில் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரெயில் மீது, சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்தது.

மெயின் லைனில் செல்ல வேண்டிய சரக்கு ரெயில், லூப் லைனில் சென்றதால் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரெயில் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தென்கிழக்கு ரெயில்வே உறுதிப்படுத்தியுள்ளது.


Next Story