அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளுக்கு ஜனநாயகத்தில் பரீட்சை நடத்தப்படுகிறது - அகிலேஷ் யாதவ் விமர்சனம்


அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளுக்கு ஜனநாயகத்தில் பரீட்சை நடத்தப்படுகிறது - அகிலேஷ் யாதவ் விமர்சனம்
x

அரசாங்கம் தோல்வியடையும் போதெல்லாம், இந்த பரீட்சை நடத்தப்படுகிறது.எதிர்க்கட்சிகள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

லக்னோ,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த இருதினங்களாக தீவிர விசாரணை நடத்தினர். டெல்லியில் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது.

இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இது குறித்து மத்திய பா.ஜனதா அரசையும், அமலாக்கத்துறை இயக்குநரகத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கான விளக்கம் இப்போது யாதெனில், 'ஜனநாயகத்தில் நடத்தப்படும் பரீட்சை' என்று கேலி செய்துள்ளார். மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளுக்கு ஜனநாயகத்தில் பரீட்சை நடத்துகிறது என்னும் பொருள் பட விமர்சித்துள்ளார்.

அமலாக்கத்துறை இயக்குநரகத்தை கேலி செய்து அவர் கூறியிருப்பதாவது, "அமலாக்கத்துறை இயக்குநரகம்(ஈ.டி) என்பதற்கான விளக்கம் இப்போது யாதெனில், 'ஜனநாயகத்தில் நடத்தப்படும் பரீட்சை (எக்ஸாம் இன் டெமோகிரசி)'.

இப்போதைய அரசியலில், அரசாங்கம் தோல்வியடையும் போதெல்லாம், இந்த பரீட்சை நடத்தப்படுகிறது. அப்போது எதிர்க்கட்சிகள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதற்கு தயாராக இருப்பவர்கள் எந்த தேர்வுக்கும் பயப்படத் தேவையில்லை. இதை பற்றி நீங்கள் ஒருபோதும் பயப்படவும் வேண்டாம்" என்று கூறினார்.


Next Story