சந்திரயான்-3 விண்கலம் பூமியை அடையும்போது... சர்ச்சையான உ.பி. முன்னாள் மந்திரியின் வாழ்த்து


சந்திரயான்-3 விண்கலம் பூமியை அடையும்போது... சர்ச்சையான உ.பி. முன்னாள் மந்திரியின் வாழ்த்து
x

நிலவின் தென் துருவ பகுதிக்கு சந்திரயான்-3 விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

லக்னோ,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டு உள்ளது. அதன் லேண்டர் நிலவில் நேற்று தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.

இந்த வெற்றியை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சுஹல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவரான ஓ.பி. ராஜ்பார் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அது சர்ச்சையாகி உள்ளது.

அதுபற்றி வெளியான வீடியோவில், தொடர்ச்சியாக ஆய்வு பணிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் விண்கல வெற்றிக்காக நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அது, பூமியில் பாதுகாப்பாக நாளை தரையிறங்கும்போது, ஒட்டு மொத்த நாடும் அதனை வரவேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராஜஸ்தானின் விளையாட்டு துறை மந்திரி அசோக் சந்த்னா, சந்திரயான்-3 விண்கலத்தின் பயணிகளுக்கு எனது வணக்கங்கள் என நேற்று தெரிவித்தது சர்ச்சையான நிலையில், ராஜ்பர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ராஜ்பர். அதன்பின் 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, மந்திரி பதவியில் இருந்து விலகி, சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டார்.

எனினும், பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே திரும்பி வந்து விட்டார்.


Next Story