பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு கல்தா: மாடுகளுக்கு வயதாகிவிட்டால் கோசாலைக்கு அனுப்ப வேண்டும்; கசாப்பு கடைக்கு அல்ல - காங்கிரஸ் கிண்டல்


பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு கல்தா: மாடுகளுக்கு வயதாகிவிட்டால் கோசாலைக்கு அனுப்ப வேண்டும்; கசாப்பு கடைக்கு அல்ல - காங்கிரஸ் கிண்டல்
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு கல்தா கொடுத்ததால் மாடுகளுக்கு வயதாகிவிட்டால் கோசாலைக்கு அனுப்ப வேண்டும்; கசாப்பு கடைக்கு அல்ல என்று காங்கிரஸ் கிண்டல்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று முன்தினம் முதற்கட்டமாக 189 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் மூத்த பா.ஜனதா நிர்வாகிகளுக்கு வலுக்கட்டாயமாக தேர்தல் அரசியலில் இருந்து அக்கட்சி மேலிடம் விலக செய்துள்ளது. மூத்த தலைவரான கே.எஸ்.ஈசுவரப்பாவுக்கும் டிக்கெட் மறுக்கப்பட்டது. இதன்காரணமாக ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்த ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது. வடகர்நாடகத்தை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் கொடுக்கப்படவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில், எடியூரப்பா, ஈசுவரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதா என்ற செடிக்கு தண்ணீர் ஊற்றி, உரமிட்டு தென் இந்தியாவில் அக்கட்சியை வளர்த்தனர். அவர்களுக்கு கட்சி மேலிடம் அவமரியாதை செய்துள்ளது. அவர்கள் நாங்கள் தான் எல்லாம் என்று கூறிவந்தனர். ஆனால் அவர்களிடம் நீங்கள் ஒன்றுமில்லை என்று மேலிடம் கூறிவிட்டது. வயதான மாடுகளை கோசாலையில் விட்டு இருக்கலாம். ஆனால் அவைகளை நேரடியாக கசாப்பு கடைக்கு அனுப்புவது சோகம். பி.எல். சந்தோசின் சதுரங்க ஆட்டத்தில் எடியூரப்பா பலிகிடா ஆகியுள்ளார். மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியின் ஆட்டத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் வீழ்ந்தார். முன்னாள் முதல்-மந்திரிகளுக்கு டிக்கெட் இல்லை என்று கூறுவது அவமானம் என விமர்சனம் செய்துள்ளது.


Next Story