கர்நாடக புதிய மந்திரிசபையில் யார்-யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?


கர்நாடக புதிய மந்திரிசபையில் யார்-யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
x

கர்நாடக புதிய மந்திரிசபையில் யார்-யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:-

காங்கிரஸ் வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால், அக்கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் பிடிவாதமாக இருப்பதால் முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க கர்நாடக புதிய மந்திரிசபையில் யார்-யார் இடம்பிடிப்பார்கள், யார்-யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 34 பேர் மட்டுமே மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி எம்.எல்.சி.க்களும் தங்களுக்கு கிடைக்க காய் நகர்த்தி வருகிறார்கள்.

உத்தேச பட்டியல்

இந்த நிலையில் புதிய மந்திரி சபையில் இடம்பிடிப்பவர்கள் குறித்து கட்சியின் பொதுச்செயலாளர்கள் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், தேர்தல் வியூக பொறுப்பாளர் சுனில் கனகோலு ஆகியோர் உத்தேச பட்டியலை தயாரித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த உத்தேச பட்டியலை தயாரித்துள்ளனர். அந்த பட்டியல் விவரம் பின்வருமாறு:-

பெலகாவி மாவட்டத்தில் லட்சுமண் சவதி, லட்சுமி ஹெப்பால்கர், சதீஸ் ஜார்கிகோளி, பாகல்கோட்டையில் ஆர்.பி.திம்மாப்பூர், விஜயாப்புராவில் எம்.பி.பட்டீல், சிவானந்தா பட்டீல், யஷ்வந்த் ராயகவுடா பட்டீல், கலபுரகியில் பிரியங்க் கார்கே, அஜய் சிங், சரண்பிரகாஷ் பட்டீல், ராய்ச்சூரில் பசனகவுடா துருவிஹால் அல்லது ஹம்பனகவுடா பத்தேர்லி, யாதகிரியில் சரணப்பா தர்ஷன்பூர், பீதரில் ரகீம்கான், ஈஸ்வர் கன்ட்ரே, கொப்பலில் ராகவேந்திரா ஹித்னால், பசவராஜ் ராயரெட்டி, கதக்கில் எச்.கே.பட்டீல், தார்வாரில் வினய் குல்கர்னி, பிரசாந்த் அப்பய்யா அல்லது சந்தோஷ் லாட், உத்தரகன்னடாவில் பீமன்னா நாயக், ஹாவேரியில் ருத்ரப்பா லமானி, பல்லாரியில் துக்காராம், நாகேந்திரா, சித்ரதுர்காவில் ரகுமூர்த்தி, தாவணகெரேயில் சாமனூர் சிவசங்கரப்பா அல்லது எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், சிவமொக்காவில் மதுபங்காரப்பா, சங்கமேஸ்வர், சிக்கமகளூருவில் ராஜேகவுடா, துமகூருவில் பரமேஸ்வர், எஸ்.ஆர்.சீனிவாஸ், கே.என்.ராஜண்ணா, சிக்பள்ளாப்பூரில் சுப்பாரெட்டி, கோலாரில் ரூபாகலா சசிதர் அல்லது நாராயணசாமி, பெங்களூருவில் கே.ஜே.ஜார்ஜ் அல்லது ராமலிங்கரெட்டி, ஹாரீஸ், எம்.கிருஷ்ணப்பா, தினேஷ் குண்டுராவ், ஜமீர் அகமதுகான், மண்டியாவில் செலுவராயசாமி, மங்களூருவில் யு.டி.காதர், மைசூருவில் எச்.சி.மகாதேவப்பா அல்லது தன்வீர் சேட், சாம்ராஜ்நகரில் புட்டரங்கஷெட்டி, குடகில் ஏ.எஸ்.பொன்னண்ணா, பெங்களூரு புறநகரில் கே.எச்.முனியப்பா.

மேலும் எம்.எல்.சி.க்கள் பி.கே.ஹரிபிரசாத், சலீம் அகமது, நசீர் அகமது, மஞ்சுநாத் பண்டாரி, தினேஷ் கூலிகவுடா, எஸ்.ரவி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிகிறது. முதல்-மந்திரி தேர்வுக்கு பிறகு மந்திரிகள் தேர்வு நடக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story