பிரதமராக வருபவர்களுக்கு மனைவி இருக்க வேண்டும்: லாலு பிரசாத் யாதவ்


பிரதமராக  வருபவர்களுக்கு மனைவி இருக்க வேண்டும்: லாலு பிரசாத் யாதவ்
x

பிரதமராக வருபவர்களுக்கு மனைவி இருக்க வேண்டும் என்று ராகுல் காந்திக்கு அறிவுரை கூறும் வகையில் லாலு பிரசாத யாதவ் தெரிவித்துள்ளர்.

புதுடெல்லி,

பிரதமராக வருபவர்களுக்கு மனைவி இருக்க வேண்டும் எனவும் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் மனைவி இல்லாமல் இருப்பது தவறானது லாலு பிரசாத் யாதவ் கூறினார். அண்மையில் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பின் போதும் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு லாலு பிரசாத் யாதவ் கூறிய நிலையில் தற்போது மீண்டும் ராகுலுக்கு லாலு பிரசாத யாதவ் அட்வைஸ் செய்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக டெல்லி புறப்பட்ட லாலு பிரசாத் யாதவ் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் குடியிருப்பில் மனைவி இல்லாமல் இருப்பது தவறானது. இப்படி இருப்பது ஒழிக்கப்பட வேண்டும்" என்றார்.


Next Story