முகலாய மன்னர்கள் பற்றி பேசினால் சித்தராமையா கோபப்படுவது ஏன்?; சி.டி.ரவி எம்.எல்.ஏ. கேள்வி


முகலாய மன்னர்கள் பற்றி பேசினால் சித்தராமையா கோபப்படுவது ஏன்?; சி.டி.ரவி எம்.எல்.ஏ. கேள்வி
x

முகலாய மன்னர்கள் பற்றி பேசினால் சித்தராமையா கோபப்படுவது ஏன்? என சி.டி.ரவி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.

சிக்கமகளூரு;

பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி சிக்கமகளூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆர்.எஸ்.எஸ். குறித்து அடிக்கடி அவதூறாக பேசி வருகிறார். ஆர்.எஸ்.எஸ் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது. அதனால் அதை பற்றி பேசுவதை சித்தராமையா நிறுத்தி கொள்ள வேண்டும்.

பசவண்ணர், ராமர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது. இதன்மூலம் நாட்டு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சேவை செய்து வருகிறது. முகாலய மன்னர்களான பாபர், திப்பு சுல்தான், கஜினி முகமது, அவுரங்கசீப் உள்ளிட்டோர் பற்றி பா.ஜனதாவினர் பேசினால் சித்தராமையா எதற்கு கோபப்படுகிறார். சித்தராமையாவுக்கு அவர்கள் என்ன உறவினர்களா?. திப்பு சுல்தான் ஒரு பயங்கரவாதி. பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story