கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் கால தாமதம் ஏன்? வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஆகலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே பருவமழை தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
"கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 4 நாட்கள் ஆகும். தென் அரபிக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருகிறது. இது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலைகளை காட்டுகிறது. எனவே இன்னும் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம்" என கூறியுள்ளது.
Related Tags :
Next Story