டி-ஷர்ட் அணிவது எதற்கு? -ராகுல் காந்தி விளக்கம்!


டி-ஷர்ட் அணிவது எதற்கு? -ராகுல் காந்தி விளக்கம்!
x

இந்திய ஒற்றுமை பயணத்தில் டி-ஷர்ட் அணிவது எதற்கு என்பது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியாவில் குளிர் காலமாக இருந்தாலும், வாட்டி வதைக்கும் குளிரால் வட இந்திய மக்கள் அவதிப்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த வருடம் வட இந்தியாவில் வழக்கத்துக்கும் அதிகமான உறைய வைக்கும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. சொல்லப்போனால், ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு டெல்லியின் பல இடங்கள் சென்றுள்ளது.

இந்தசூழ்நிலையில், ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடும் குளிரிலும் டி- ஷார்ட் அணிந்து நடந்து செல்கிறார் என்று பலரால் வியப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவினர் தொடர்ந்து அவரது டி-ஷர்ட் தொடர்பான விவாதத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், டி-ஷர்ட் அணிவது எதற்கு என்பது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். ராகுல் காந்தி கூறுகையில்,

"மத்தியப்பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்ட போது 3 ஏழை சிறுமிகள் கந்தலான ஆடை அணிந்து என்னிடம் ஓடி வந்தனர். நான் அந்த சிறுமிகளை தொட்டபோது கடும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். நானும் அப்படி குளிரில் நடுங்கும் வரை டி-ஷர்ட் மட்டுமே அணிவேன் என அந்த நாளில் முடிவு செய்தேன். அன்றிலிருந்து டி-ஷர்ட்டில் பாதையாத்திரை செல்கிறேன். டி-ஷர்ட் மூலமாக அந்த வலியை வெளிப்படுத்துகிறேன்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story