கடவுள் ராமர் அவர்களை ஆசீர்வதிப்பாரா என்ன? ஷிண்டேவின் அயோத்தியா பயணம் பற்றி சஞ்சய் ராவத் கேள்வி


கடவுள் ராமர் அவர்களை ஆசீர்வதிப்பாரா என்ன? ஷிண்டேவின் அயோத்தியா பயணம் பற்றி சஞ்சய் ராவத் கேள்வி
x

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் அயோத்தியாவில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர்.


புனே,


மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அயோத்தியாவில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவருடன் துணை முதல்-மந்திரி பட்னாவிஸ், சிவசேனா எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சென்று உள்ளனர்.

கடவுள் ராமரின் ஆசிகள் எங்களுக்கு உள்ளன. அதனாலேயே, எங்களுக்கு வில் மற்றும் அம்பு சின்னம் கிடைத்தது என செய்தியாளர்களிடம் பேசும்போது ஷிண்டே கூறினார்.

இதுபற்றி சிவசேனா (உத்தவ் தாக்கரே) அணியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, கடவுள் ராமர் மீது எங்களுக்கும் நம்பிக்கை உள்ளது. அயோத்தியாவுக்கு நாங்களும் பல முறை சென்றிருக்கிறோம்.

பாபர் மசூதி சம்பவம் நடந்தபோது, அவர்கள் ஓடி விட்டனர். மராட்டியத்தில் விவசாயிகள், மழை மற்றும் புயலால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளனர். ஆனால், இந்த விவகாரங்களை அரசு புறந்தள்ளி விட்டு உள்ளது. அயோத்தியாவுக்கு சென்று உள்ளது.

கடவுள் ராமர் அவர்களை ஆசீர்வதிப்பாரா என்ன? அவர்கள் எங்களை அப்படியே பின்பற்றுகின்றனர். யார் அசல் என்றும், யார் நகல் என்றும் பொதுமக்களுக்கு தெரியும் என ஷிண்டேவின் அயோத்தியா பயணம் பற்றி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

1 More update

Next Story