4-வது வெற்றியை பெறுவாரா எம்.கிருஷ்ணப்பா?


4-வது வெற்றியை பெறுவாரா எம்.கிருஷ்ணப்பா?
x

கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது உத்தரஹள்ளி தொகுதி நீக்கப்பட்டு பெங்களூரு தெற்கு என்ற தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி மொத்தம் 8 மாநகராட்சி வார்டுகள், 8 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், 10 கிராம பஞ்சாயத்துகள், ஒரு நகர புரசபையும் தன்னகத்தே உள்ளடக்கியது.

இந்த தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 77 ஆயிரத்து 247 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 417 ஆண்களும், 3 லட்சத்து 19 ஆயிரத்து 727 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 103 பேரும் அடங்குவர். கடந்த 1957-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இந்த தொகுதிக்கு மொத்தம் 14 தேர்தல்கள் நடைபெற்று உள்ளது. இதில் கடந்த 6 சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா தொடர்ச்சியாக வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காங்கிரஸ் 4 முறையும், ஜனதா கட்சி 3 முறையும், சுயேச்சை ஒரு முறையும் இங்கு வெற்றி பெற்று உள்ளனர். இந்த தொகுதியில் தற்போது பா.ஜனதா கட்சியை சோந்த எம்.கிருஷ்ணப்பா எம்.எல்.ஏ.வாக உள்ளார். தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றுள்ள எம்.கிருஷ்ணப்பா வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் எச்.பி.ராஜகோபால் ரெட்டி களம் இறங்குகிறார். காங்கிரஸ் சார்பில் கடந்த முறை தோல்வி அடைந்த ஆர்.கே.ரமேசுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 முறை இங்கு எம்.எல்.ஏ.வாக உள்ள எம்.கிருஷ்ணப்பா இங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து உள்ளார். இது அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த தொகுதியில் உத்தரஹள்ளி, எலச்சனஹள்ளி, சிங்கசந்திரா, பேகூர், வசந்தபுரா, கோனனகுண்டே, அஞ்சனபுரா, கொட்டிகெரே ஆகிய வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளில் பா.ஜனதா பலம் வாய்ந்ததாக உள்ளது. இதுவும் அவருக்கு சாதகமாக உள்ளது. இந்த முறை எம்.கிருஷ்ணப்பாவின் வெற்றியை தடுக்க காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. பெங்களூரு தெற்கு தொகுதியில் கடந்த 3 முறை எம்.எல்.ஏ.வாக உள்ள கிருஷ்ணப்பா இங்கு 4-வது வெற்றியை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்

உத்தரஹள்ளி மற்றும் தொகுதி மறுசீரமைப்பின்படி உருவாக்கப்பட்ட பெங்களூரு தெற்கு தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள்

ஆண்டு வெற்றி தோல்வி

1957 நரசிம்மரெட்டி(காங்.)-13,702 ரங்கப்பாரெட்டி(சுயே.)-13,452

1962 முனிசின்னப்பா(சுயே.)-17,441 பசவலிங்கப்பா(காங்.)-11,540

1967 ராமகிருஷ்ணா(காங்.)-11,886 சாமபோவி(சுயே.)-1,550

1972 பசவலிங்கப்பா(காங்.)-21,903 ராமகிருஷ்ணா(ஸ்தாபன காங்.)- 12,704

1978 ராஜசேகரன்(ஜனதாகட்சி)-34,081 வெங்கடேஷ்(இந்திய தேசிய காங்- இந்திரா)- 30,944

1983 சீனிவாஸ்(ஜனதாகட்சி)-52.175 நாராயணரெட்டி(காங்)-44,018

1985 சீனிவாஸ்(ஜனதாகட்சி)-73,655 ரமேஷ்(காங்.)- 58,522

1989 ரமேஷ் (காங்.)-1,25,065 சீனிவாஸ்(ஜனதாதளம்)-71,523

1994 சீனிவாஸ்(பா.ஜனதா)- 1,44,193 ரமேஷ் (காங்.)- 98,315

1999 அசோக்(பா.ஜனதா)- 2,30,914 ரமேஷ்(காங்.)- 2,07,009

2004 அசோக்(பா.ஜனதா)- 3,19,309 சோமசேகர்(காங்.)- 2,29,308

2008 எம்.கிருஷ்ணப்பா(பா.ஜனதா)-71,114 சதானந்தா(காங்.)-36,979

2013 எம்.கிருஷ்ணப்பா(பா.ஜனதா)-1,02,207 பிரபாகர்ரெட்டி(காங்.)-72,045

2018 எம்.கிருஷ்ணப்பா(பா.ஜனதா)-1,52,427 ஆர்.கே.ரமேஷ்(காங்.)-1,22,068


Next Story