செப்.30 ஆம் தேதிக்கு பிறகும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா..? ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்


செப்.30 ஆம் தேதிக்கு பிறகும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா..? ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்
x
தினத்தந்தி 22 May 2023 4:19 PM GMT (Updated: 22 May 2023 4:37 PM GMT)

செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் தெரிவித்ததது. இதன்படி நாளை முதல் வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். இதற்கு எந்த ஆவணமும் அடையாள அட்டையும் தேவையில்லை என்று எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதனால், செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போகும் என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-"2 ஆயிரம் நோட்டுக்களை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். நான்கு மாதங்கள் அவகாசம் உள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும். காலக்கெடு கொடுத்ததற்கான காரணமே மக்கள் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு வங்கிகளில் கொடுத்து மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பணப்புழக்கத்தை ஈடு கட்டவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது" என்றார்.


Next Story