விப்ரோ நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் பாதியாக குறைப்பு


விப்ரோ நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் பாதியாக குறைப்பு
x

புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைப்பதாக பிரபல ஐ.டி. நிறுவனமான விப்ரோ அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைப்பதாக பிரபல ஐ.டி. நிறுவனமான விப்ரோ அதிரடியாக அறிவித்துள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களில் 425 பேரை கடந்த மாதம் வேலை நீக்கம் செய்த விப்ரோ நிறுவனம், அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளது. சுமார் மூன்றாயிரம் புதிய ஊழியர்களை, ஆறரை லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்திற்கு பணியமர்த்த வேலை உறுதி கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் அவர்களின் ஆண்டு சம்பளத்தை மூன்றரை லட்சம் ரூபாயாக குறைப்பதாக அறிவித்துள்ளது . இதற்கு விருப்பமுள்ளவர்கள் பணியில் சேரலாம் என்றும், விருப்பம் தெரிவிக்காதவர்கள், காத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

உலக அளவில் பொருளாதார சூழல் மாறியுள்ளதால், இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாக விப்ரோ கூறியுள்ளது. 2022-23-ல் இதுவரை மொத்தம் 17 ஆயிரம் பேரை பணியமர்த்தியுள்ள விப்ரோவில் 2.58 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

அதே சமயத்தில் டி.சி.எஸ் நிறுவனம் ஆட்குறைப்பு எதுவும் செய்யப் போவதில்லை என்றும், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.


Next Story