பால் பொருட்கள்-உணவு தானியங்கள் மீதான வரியை வாபஸ் பெற வேண்டும்- குமாரசாமி வலியுறுத்தல்


பால் பொருட்கள்-உணவு தானியங்கள் மீதான வரியை வாபஸ் பெற வேண்டும்- குமாரசாமி வலியுறுத்தல்
x

பால் பொருட்கள்-உணவு தானியங்கள் மீதான வரியை வாபஸ் பெற வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-நாட்டில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்கள் அன்றாடம் 2 வேளை உணவு சாப்பிடுவதே பெரும் சவாலாக உள்ளது. அவர்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில் பால் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் மீது புதிதாக ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளனர்.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த ஜி.எஸ்.டி. வரி முறையை அறிமுகம் செய்யும்போது இதை நான் எதிர்த்தேன். இது சாமானிய மக்கள் மற்றும் மாநிலங்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினேன். அது இப்போது நடக்கிறது. அதனால் பால் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story