குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பெங்களூரு அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே கோலஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் பிரகாஷ் (வயது 35). இவரது மனைவி காவ்யா (26). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக பிரகாஷ்-காவ்யா தம்பதியின் 2-வது மகன் கடந்த ஆண்டு உயிரிழந்தான். இதையடுத்து பிரகாஷ், காவ்யா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட காவ்யா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெலமங்களா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story