மேற்கு வங்காளத்தில் ஆம்புலன்ஸ் மோதி தாய், மகள் பலி


மேற்கு வங்காளத்தில் ஆம்புலன்ஸ் மோதி தாய், மகள் பலி
x

கோப்புப்படம்

மேற்கு வங்காளத்தில் ஆம்புலன்ஸ் மோதி தாய், மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை பெண் ஒருவர் தனது 10 வயது மகளுடன் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த தாய், மகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தை தொடர்ந்து அங்கு பெரும் கூட்டம் திரண்டது. பல முறை புகார் அளித்தும், அந்த பகுதியில் நெடுஞ்சாலையை பாதுகாப்பானதாக மாற்ற நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில் இருந்த சிலர் விபத்துக்கு காரணமான ஆம்புலன்சுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் காரணமாக கொல்கத்தா-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.


Next Story