ஆக்ரா ஓட்டலில் பணியாற்றிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 5 பேர் கைது


ஆக்ரா ஓட்டலில் பணியாற்றிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 5 பேர் கைது
x

விசாரணை நடத்த சென்ற போலீசார் ( படம் -ஏ.என்.ஐ)

தினத்தந்தி 13 Nov 2023 2:59 PM IST (Updated: 13 Nov 2023 3:51 PM IST)
t-max-icont-min-icon

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆக்ரா,

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒட்டலில் பெண் ஊழியர் ஒருவரை 5 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறியதாவது: "நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்டிருப்பதாக தாஜ்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைப்பு வந்தது.

இதையடுத்து, அங்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்குப் பிறகு, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு பெண் உள்பட 5 பேரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.


Next Story