அரியானாவில் ஒடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம் - பிறந்த குறைமாத குழந்தை உயிரிழப்பு


அரியானாவில் ஒடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம் - பிறந்த குறைமாத குழந்தை உயிரிழப்பு
x

அரியானா மாநிலத்தில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அம்பாலா,

அரியானா மாநிலத்தில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குறைபிரசவம் என்பதால் அந்த குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை பேருந்து ஒன்று அம்பாலாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முல்லானா அருகே டேராடூன் சென்று கொண்டிருந்தது. அம்பாலாவில் இருந்து தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சஹாரன்பூருக்கு சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த சில பெண்கள் அவருக்கு குழந்தை பிறக்க உதவினர்.

பஸ் டிரைவர் பஸ்சை முல்லானாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவமனையில் அந்த பெண்ணும் குழந்தையும் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முல்லானா சிவில் மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி குல்தீப் சிங் கூறுகையில், அந்தப் பெண்ணின் பிரசவம் குறைபிரசவம் என்பதால் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார்.


Next Story