வீட்டில் அடைத்துவைத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


வீட்டில் அடைத்துவைத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

Image Courtesy: Reuters

வீட்டில் அடைத்துவைத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு குழந்தை உள்ளது.

இதனிடையே, அந்த குடும்பத்திற்கு சஞ்சய் சர்மா என்ற நபர் மாந்திரவாதி கூறி அறிமுகமாகியுள்ளார். சஞ்சய் அந்த குடும்பத்திற்கு சில மாந்திரிக நடவடிக்கைகளையும் செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்த சஞ்சய் தனியாக இருந்த பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த செயலை வீடியோ எடுத்த சஞ்சய் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளான்.

பின்னர், அந்த பெண்ணை கடத்தி சென்று ஒரு வீட்டில் அடைத்துவைத்து மயக்க மருந்து கொண்டு வேறு சிலருடன் சேர்ந்த அந்த பெண்ணை பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். கடந்த ஒன்றரை மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து மயக்க மருந்து கொடுத்து அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, மனைவியை காணவில்லை என அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து கடந்த 27-ம் தேதி அந்த பெண்ணை சஞ்சய் சர்மா போலீஸ் நிலையத்திற்கு வெளியே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளான்.

தனக்கு நடந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த 7-ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணுக்கு மயக்க மருத்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சஞ்சய் சர்மா மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததால் சஞ்சய் சர்மவை தவிர பிற குற்றவாளிகள் யார் என்பது குறித்தும் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான சஞ்சய் சர்மாவையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story